பதிவு செய்த நாள்
09
ஜன
2016
12:01
சென்னை: மஹாமகம் நடைபெறும் கும்பகோணத்தில், பிப்., 18 முதல், 20ம் தேதி வரை, அகில பாரத துறவியர் மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து சென்னையில், மாநாட்டிற்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவாமி ராமானந்தா கூறியதாவது:கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு, ஒரு முறை நடைபெறும் மஹாமக விழா, பிப்., 22ல் நடைபெற உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில், அகில இந்திய துறவியர் சங்கம் சார்பில், பிப்., 18 முதல், 20ம் தேதி வரை, அகில இந்திய துறவியர் மாநாடு, மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.நதிகளை தேசிய மயமாக்க வேண்டும்; கோ சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன.இவ்வாறு சுவாமி ராமானந்தா தெரிவித்தார்.