மதுரை: மதுரையில் ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சேவா சமாஜத்தின் 235வது ஜெயந்தி இசை விழா நேற்று துவங்கியது. சமாஜ தலைவர் சாந்தாராம் தலைமை வகித்தார். கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரி செயலாளர் ராதாகிருஷ்ணன், சவுராஷ்டிரா மத்திய சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கே.எல்.என். பொறியியல் கல்லுாரி செயலாளர் கணேஷ், சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தனர். நாத சங்கமம் இசை நிகழ்ச்சியில் கல்யாண்குமார், லட்சுமணராஜ், குப்புசாமி ஆகியோர் புல்லாங்குழல் வாசித்தனர். வயலின் வித்வான் குப்புசாமிக்கு ’வேங்கடரமண பாகவதர்’ விருதும், வாய்ப்பாட்டு கலைஞர் கீதாபாரதிக்கு ’நாகராஜ பாகவதர்’ விருதும், பன்முக வித்வான் ராமாச்சாரிக்கு ’ராமரத்ன பாகவதர்’ விருதும் வழங்கப்பட்டன. மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர். சவுராஷ்டிரா சபையில் ஜன.,10 வரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.