அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை மற்றும் வளத்தியில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு மகா யாகம் நடந்தது. அவலூர்பேட்டை மொட்டை விநாயகர் கோவில் மற்றும் வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு மகா யாகமும், சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.