பதிவு செய்த நாள்
09
ஜன
2016
12:01
திருச்சி: திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில், அனுமந்ஜெயந்தி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, 1,00,008 வடமாலை மற்றும் ஜாங்கிரி மாலை சாற்றுதல் நிகழ்ச்சியும், ஏகதின லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 9ம் தேதியான இன்று அனுமந்ஜெயந்தி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, 1,00,008 வடமாலை மற்றும் முதன் முறையாக, 1,00,008 ஜாங்கிரி மாலை சாற்றுதல் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது. அதிகாலை, 5.30 மணிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை, காலை, 7 மணிக்கு வடமாலை மற்றும் ஜாங்கிரி மாலை சாற்றுதல் நடைபெற்றது. காலை. 9 மணி முதல், மதியம், 1 மணி வரையும், மாலை, 4.30 மணி முதல், இரவு, 8 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும். இரவு, 9 மணிக்கு மேல், ஆஞ்சநேய ஸ்வாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனுமந்ஜெயந்தி விழாவை முன்னிட்டு, காலை, 9 மணி முதல் பிரசாதமும், சிறப்பு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப் படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ஆனந்தகுமார் ராவ் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.