பதிவு செய்த நாள்
09
ஜன
2016
03:01
நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர்,திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோவிலில் நடந்த ராகு பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடைய,பிரம்மன்,சந்திரன்,துருவாச முனிவர், சப்தரிஷிகள், சமுத்திரராஜன், உருத்திரசன்மன் ஆகியோரால் சுயம்பு மூர்த்தியாய் வழிப்பட்ட பிரசித்திப்பெற்ற மிக பழமையான ராகு தோஷ பரிகார தலமாக விளங்கும், திருநாகவல்லி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோவிலில் நேற்று மதியம் ராகு பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 10 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கி,மதியம் 12.15 மணிக்கு ராகு.கேதுவுக்கு கலாசாபிஷேகம் தொடர்ந்து 12.37 மணிக்கு நாகநாதருக்கு, சந்தனம்,இளநீர், தேன்,தயிர்,பால்,திரவிய பொடிகளால் அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. ராகுபகுவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்ததால், மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ராசியை சேர்ந்த பக்தர்கள்,பரிகாரம் செய்து வழிப்பட்டனர். நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.