கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த பழைய விருத்தகிரிகுப்பம் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. அனுமன் ஜெயந்தியையொட்டி, ஸ்ரீரங்கநாதன் அன்னதான அறக்கட்டளை சார்பில், காலை 9:00 மணியளவில் பால்குடம் வீதியுலா, தொடர்ந்து, சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. 11:00 மணியளவில் வெற்றிலை, வடை, முறுக்கு, வாழைப்பழம், பூ மாலைகள் சாற்றி சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமனோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.