திருநள்ளார் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2016 04:01
காரைக்கால்: திருநள்ளார் நளநாராயண பெருமாள் கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரைக்கால் திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வர் கோவிலுக்கு வடக்கே நளநாராயணன பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் நரசிம்மர், கருடன், வராகர், ஹயக்கீரிவர், ஆஞ்சநேயர் ஆகியோராக காட்சி அளித்து வருகிறார். இத்தகைய சிறப்பு மிக்க பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் வருடப்பிறப்பு, அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு,வெண்ணை காப்பு அலங்காரத்திலும்,மற்றும் துளசி மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிப்பட்டனர்.