பதிவு செய்த நாள்
09
ஜன
2016
04:01
கம்மாபுரம்: முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா வரும் 15ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, அன்று காலை கொடியேற்றி, காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. தினசரி காலை 9:00 மணியளவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணியளவில் பெரியநாயகி, முதுகுன்றீஸ்வரர், பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள், செம்புலிங்க அய்யனார் சுவாமிகள் வீதியுலா நடக்கிறது. தைப்பூசம் தீர்த்தவாரி திருவிழாயையொட்டி, வரும் 24ம் தேதி காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 3:00 மணியளவில், காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், சித்தர் ஏரியில் வேல் முழுகுதல், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள், 25ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. 26ம் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் முடிவடைகிறது.