அவிநாசி: திருமுருகன்பூண்டி அன்பு இல்லம் சார்பில், மார்கழி மாதத்தில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை, திருவெம்பாவை பாராயண ஊர்வலம் நடத்தப்படுகிறது. நிறைவு வாரமாகிய நேற்று, காலை, 6:00 மணிக்கு அன்பு இல்லத்தில் ஊர்வலம் புறப்பட்டது. சுவாமி விவேகானந்த அறக்கட்டளை தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். மாதவவினேஸ்வரர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சென்று, திருவெம்பாவை, திருப்பாவை பாடி, சுவாமி தரிசனம் செய்தனர். அறக்கட்டளை செயலாளர் சண்முகம், நிர்வாகக்குழு உறுப்பினர் கணேசன், விவேகானந்த குருகுல பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.