சபரிமலைக்கு பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது? சுப்ரீம் கோர்ட் கேள்வி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2016 06:01
புதுடில்லி : சபரிமலைக்கு பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது? கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கோயில் நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல் நோட்டீஸ் அனுப்பி, வழக்கை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம்கோர்ட் தான், மேற்கண்ட கேள்வியை எழுப்பியது.. கோயில் நிர்வாகம் மற்றும் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது .