ஊத்துக்கோட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2016 11:01
ஊத்துக்கோட்டை: சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஊத்துக்கோட்டை பிராமணத் தெருவில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம், சுந்தர வரதராஜ பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. முன்னதாக காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இரவு, உற்சவர் சுந்தர வரதராஜ பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.