Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி முருகன் வீதியுலா மஹாலெட்சுமி குபேரர் கோவில் பொங்கல் விழா! மஹாலெட்சுமி குபேரர் கோவில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வர் ஸ்ரீநமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா!
எழுத்தின் அளவு:
திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வர் ஸ்ரீநமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா!

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
02:01

திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வர் ஸ்ரீநமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழாவின் 10ம் நாள் நிகழ்ச்சியில் காலை நமசிவாயமூர்த்திகள் தோத்திர பாராயணமும், ஆன்மார்த்த மூர்த்தி ஞானமா நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளும், குருமுதல்வர் நமசிவாயமூர்த்திக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து புனிதகடம் புறப்பாடும், மகாஅபிஷேகமும் மங்கள இசை முழங்க நமசிவாய மந்திரத்துடன் நடந்தது.

பின்னர் குருபூஜை விழா மலராக சிவன்கோயில்களில் வழிபடுவது எப்படி? எனும் நூலை ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட அதனை சூரியனார்கோயில் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் பெற்றுக் கொண்டார். தினமலர் சிறப்பு மலரை வெளியிட அதனை செங்கோல் ஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் பெற்றுக் கொண்டார். பின்னர் திருப்பனந்தாள் காசிமடம் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், தருமை ஆதீனம் ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

குடியாத்தம் சந்திரசேகர சிவாச்சாரியாருக்கு சிவாகமக் கலாநிதி, வைத்தீஸ்வரன்கோயில் முருகன் ஓதுவாருக்கு தெய்வத் தமிழிசைச் செல்வர், இசைக்கலைஞர்கள் சென்னை சுசித்ராவுக்கு சங்கீத வித்யாநிதி, சீர்காழி ரமேஷ்க்கு நாதஸ்வர கலைமணி, தமிழறிஞர் ஈரோடு வெங்கடாசலத்திற்கு சிவநெறித் திருத்தொண்டர் மாமணி, கல்வி பணிக்கு குத்தாலம் ராஜ் வித்யாலயா நிறுவனர் பாண்டியனுக்கு கல்வி சேவா ரத்தினம், சுவாமிமலை மோகன்ராஜ் ஸ்தபதிக்கு சிற்பக் கலை வித்தகர் எனும் விருதுகளும், தலா பொற்கிழி ரூ. 5 ஆயிரமும் ஆதீனம் 24வது குருமகாசன்னிதானம் வழங்கினார். தொடர்ந்து மாகேஸ்வர பூஜையும், ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சியும், சென்னை சுசித்ரா குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடந்தது. இதில் ஆதீன தம்பிரான் சுவாமிகள், மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம் பிரதிநிதிகள், சிவகங்கை சமஸ்தானம் இளங்கோ, சைவ சித்தாந்த பேராசிரியர்கள், ஆதீனப்புலவர்கள், கோயில் கண்காணிப்பாளர்கள், ஆசிரியர்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar