பதிவு செய்த நாள்
18
ஜன
2016
04:01
திண்டுக்கல்: திண்டுக்கல், காந்திகிராமம், செட்டியபட்டி, விஜயநகரத்தில் அமைந்துள்ள மஹாலெட்சுமி குபேரர் கோவிலில் பொங்கல் விழா சிறப்பாக நடந்தது. இக்கோவிலின் கும்பாபிேஷகம் கடந்த டிசம்பர் 27 ம் தேதி நடந்த நிலையில், மண்டலாபிேஷகம் ஜனவரி 13ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. தெடர்ந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 15ம் தேதி மஹாலட்சுமி, குபேரருக்கு காய்கறி அலங்காரம், ஜனவரி 16ம் தேதி கனி அலங்காரம், 17 ம் தேதி வளையல் அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டிருந்தன. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், ஸ்ரீ மஹாலெட்சுமி குபேரர், சித்ரலேகா சுவாமிகளுக்கு விசேஷ அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றன பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலம் என சாஸ்திரம் கூறுகிறது. இக்காலத்தில் வியாபாரம் நொடித்து, கடன் தொல்லை அதிகமாகி அவதிப்படுவோர், திருமணம், புத்திரபாக்கியம், சகல சம்பத்துக்களையும் வேண்டுவோர், வியாழன் மாலை குபேர தீபம் ஏற்றி லட்சுமி குபேர பூஜை செய்தால் நலம் பெறலாம். இது குறித்த விவரங்களுக்கு, 9500 474731 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.