சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் இன்று காலை 10.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. நாளை இரவுடன் பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்படுகிறது. சபரிமலையில் கடந்த டிச.30-ம் தேதி மாலையில் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. 31-ம் தேதி அதிகாலையில் தொடங்கிய நெய்யபிஷேகம் இன்று காலை 10.30 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் நெய்யபிஷேகம் கிடையாது. தொடர்ந்து தேவசம்போர்டு சார்பில் களபாபிஷேகம் நடைபெறும்.நாளை அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். இரவு பத்து மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. 21-ம் தேதி காலை 6.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.,13ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும்.