நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. காணும்பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் கரிநாள் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு அன்று காலை 11:00 மணிக்கு விநாயகர், வள்ளி வசேனா சுப்ரமணியர், காளியம்மன், ராஜராஜேஸ்வரி மற்றும் பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்து விநாயகர் வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:00 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் வள்ளி தேவசேனா சுப்ரமணியர் சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று 18ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு கோவிலில் எதிரில் உள்ள தெப்பக்குளத்தில் விநாயகர் தெப்பல் அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர்.