பதிவு செய்த நாள்
19
ஜன
2016
11:01
மேட்டுப்பாளையம்: குருந்தமலை கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. காரமடை மருதுார் ஊராட்சி குருந்தமலையில் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இங்கு, தைப்பூசத் தேர்த்திருவிழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. யாகசாலையில் கொடிக்கு சிறப்பு பூஜையும், குழந்தை வேலாயுதசுவாமிக்கு திருமஞ்சன அலங்கார பூஜையும் செய்யப்பட்டன. தினமும் காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளன. 22ம் தேதி, இரவு அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 23ம் தேதி, யானை வாகனத்தில் திருவீதி உலாவும், 24ல் மாலை தைப்பூச தேரோட்டமும், 25ல் பரிவேட்டையும், 26ல் ஆறுமுகக் காவடி செலுத்துதலும், அன்னதானமும், இரவு தெப்பத்திருவிழாவும், 27ல் உற்சவ பூர்த்தி விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கைலாஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்து கலாசார கருத்தரங்கு பெ.நா.பாளையம் n துடியலுார் அருகே இந்து முன்னணி சார்பில், இந்து கலாசாரம் குறித்த கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் பாலன் தலைமை வகித்தார். கன்னியாகுமரி விவேகானந்த ஆசிரம தலைவர் சுவாமி சைத்யானந்த மகராஜ் பேசுகையில்,“நமது வாழ்க்கை முறை மாறுவதால், நமது கலாசாரமும் படிப்படியாக மாறி வருகிறது. காலம், காலமாக நம்மால் பின்பற்றப்பட்டு வரும் பண்பாட்டு முறைகளை கட்டிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அதை நம் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது,” என்றார்.