உடுமலை: ஸ்ரீ காஞ்சி பெரியவரின் திவ்ய சரிதம் சொற்பொழிவு, உடுமலையில் நடந்தது. உடுமலை பிராமண மகா சங்கம் மற்றும் உபாசனா சார்பில், உடுமலை ராமய்யர் திருமண மண்டபத்தில், ஸ்ரீ காஞ்சி பெரியவரின் திவ்ய சரிதம் சொற்பொழிவு நடந்தது. பிராமண மகா சங்க பொது செயலாளர் மதனசந்திரன் வரவேற்றார். கோவை ராமர்கோவில் செயலாளர் மோகன்சர்மா தலைமை வகித்தார்.காஞ்சி கணேச சர்மா, ஸ்ரீ காஞ்சி பெரியவரின் சிறப்பு, அவரின் அருளுரை, அவரது ஆன்மிக சேவை, குறித்து பேசினார். உடுமலை பிராமண சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.