Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண் சோறு சாப்பிட்டு பக்தர்கள் ... உடுமலை கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா உடுமலை கோவில்களில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் மகாமக பெருவிழா லோகோ வெளியீடு!
எழுத்தின் அளவு:
கும்பகோணம் மகாமக பெருவிழா லோகோ வெளியீடு!

பதிவு செய்த நாள்

28 ஜன
2016
11:01

தஞ்சாவூர்: மகாமக விழாவை சிறப்பிக்கும் வகையில், சிறப்பு அடையாள சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டு உள்ளது. கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக பெருவிழா, பிப்., 13ம் தேதி, பிற்பகல் 12:00 மணிக்கு மேல், 1:30 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மகாமக தீர்த்தவாரி, பிப்., 22ம் தேதி, பிற்பகல் 12:00 மணிக்கு மேல், 1:30 மணிக்குள் நடக்க உள்ளது. இந்நிலையில், மகாமக பெருவிழா, 2016ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு அடையாள சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டு உள்ளது. இதில், ஆதிகும்பேஸ்வரர் கோவில் கோபுரம், மகாமக குளம், அதில் சிவன், பார்வதி படத்துடன் சூலத்தையும், பெருமாளுக்குரிய திருமண், அந்த எழுத்துகளின் நடுவில் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த அடையாள சின்னம், அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் வெளியிடப்படும் தகவல்களில் இடம்பெறும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், அறநிலையத் துறை சார்பில் தபால் அட்டை, சிறப்பு தபால் கவர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மொபைல் ஆப்ஸ் வெளியிடப்பட்டு உள்ளது.

பிப்., 25 வரை மேட்டூர் அணை திறப்பு:
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஆண்டு, ஆக., 9ம் தேதி முதல், தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், காவிரி டெல்டாவில், முழு வீச்சில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. எனினும், சில பகுதிகளில் காலதாமதமாக பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளதால், மேட்டூர் அணை வழக்கமாக மூடப்படும், ஜன., 28ம் தேதிக்கு பின்னும், தொடர்ந்து தண்ணீர் திறந்து விடும்படி, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகத் திருவிழா, அடுத்த மாதம், 22ம் தேதி நடக்கிறது. விவசாயிகளின் கோரிக்கை மற்றும் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு, இன்று முதல், பிப்., 25ம் தேதி வரை, 6,000 கனஅடி தண்ணீரை, மேட்டூர் அணையில் இருந்து திறந்து விட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar