Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆத்தூரில் 108 திருவிளக்கு பூஜை பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2 கோவிலில் மகா சிவராத்திரி: முகூர்த்தக்கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2016
01:01

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை, அப்புசெட்டி தெருவில் தேரடி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று காலை, 6 மணிக்கு முகூர்த்தக் கால் நடுதல் விழா நடந்தது. மகா கணபதி ஹோமத்துடன், பக்தர்கள் புடைசூழ முகூர்த்தக்கால் நடப்பட்டது. வருகிற பிப்.,5ம் தேதி மாலை, 6 மணிக்கு அம்மனுக்கு பூச்சாட்டுதல், 8ம் தேதி பால்குடம், தீர்த்தக்குடம், பூஜை கூடை வருதல் நிகழ்ச்சியும், 19ம் தேதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, மார்ச், 7ல், கல்யாண வைபவம், இரவு, 8 மணிக்கு சக்தி அழைத்தல், கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள், 8ம் தேதி, அதிகாலை, 2 மணிக்கு பம்பை, தாரை, தப்பட்டை முழங்க, முகவெட்டு கப்பறை புறப்பாடும், காலை, 6 மணிக்கு கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடும் நடக்கிறது. பகல், 12 மணிக்கு, அம்மனுக்கு பச்சைப்போடுதல், மயான சூறையாடல் நடக்கிறது. 11ம் தேதி கும்ப பூஜை, 13ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு மகா கணபதி ஹோமத்துடன், காலை, 10 மணிக்கு மேல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து, காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மார்ச், 7ல், மகா சிவராத்திரி விழா, 8ம் தேதி மயான கொள்ளை, 11ல் 108 சங்காபிஷேகம், 17ல் அன்னாபிஷேகம், 18ல் சத்தாபரணம், 19ல், ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar