Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலையில் குவிந்த கூட்டம்: ... தை அமாவாசை : அழகர்கோவில் நுாபுரகங்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசையையொட்டி தாமிரபரணியில் வழிபாடு
எழுத்தின் அளவு:
தை அமாவாசையையொட்டி தாமிரபரணியில் வழிபாடு

பதிவு செய்த நாள்

09 பிப்
2016
12:02

திருநெல்வேலி: மறைந்த முன்னோர்கள் அமாவாசை தினத்தன்று தங்களது சந்ததியினரின் வேண்டுதல்கள், வழிபாடுகளை ஏற்க பூமிக்கு வருகிறார்கள் என்பது ஐதீகம். அதன் காரணமாக அமாவாசை தினத்தன்று மூதாதையர் வழிபாடு நடக்கிறது. இதில் தை அமாவாசை அன்று நடைபெறும் மூதாதையர் வழிபாடு சிறப்பானது. அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வருடம் முழுவதும் தர்ப்பணம் கொடுத்ததற்கு சமம் என்று கூறப்படுகிறது. அதன்படி இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தமிரபரணி ஆற்றுப்படுகைகளிலும், கடற்கரைகளிலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். அங்கு இன்று அதிகாலையில் குவிந்த மக்கள் அற்றிலும், கடலிலும் புனித நீராடினர். பின்னர் தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பை புல் வைத்து பித்ருக்களுக்கு எள்ளும், நீரும் அளித்து தர்ப்பணம் செய்தனர். பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கரை மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதிகளிலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். குற்றாலம் அருவிக் கரையில் இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமானோர் தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். அங்கு அருவிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். அதே போன்று நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில், வண்ணார் பேட்டை பேராச்சி அம்மன்கோவில் ஆகிய இடங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar