Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆக.,23ல் ஆவணி மூல உற்சவம் துவக்கம் ராஜகணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாபசுவாமி கோவில் பாதுகாப்பில் தீவிரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2011
11:08

திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ள நிலையில், கோவிலைச் சுற்றிலும் உள்ள தற்காலிக நடைபாதை கடைகளை அகற்றிட மாநகராட்சி முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்திப் பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பாதாள அறைகளில், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொக்கிஷங்களின் மதிப்பறிய, சுப்ரீம் கோர்ட் நியமித்த ஐந்து பேர் கொண்ட குழு, தற்போது இங்கு முகாமிட்டுள்ளது. ஆனால், பாதாள அறைகளிலுள்ள பொக்கிஷங்கள் மதிப்பீடு செய்யும் பணி எப்போது துவங்கும் என்பது, இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், கோவிலுக்கு தற்போதுள்ள மூன்றடுக்கு பாதுகாப்பை விட அதிநவீன பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நகர போலீஸ் கமிஷனர் கோவிலைச் சுற்றியுள்ள நடைபாதைகளில் சாலையோர தற்காலிக கடைகளை அகற்ற மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, மாநகராட்சியினர் அங்குள்ள நூறுக்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற முடிவு செய்துள்ளனர். வரும், 20ம் தேதிக்குள் அங்குள்ள கடைகளை அகற்றி விட்டு, நகர போலீஸ் கமிஷனருக்கு அறிக்கை அனுப்ப உள்ளார். மாநிலத்தில் விரைவில் ஓணம் பண்டிகை வர உள்ள நிலையில், பிற மாநிலங்களைச் சேர்ந்த பலரும் அங்கு பல கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய துவங்கி உள்ளனர். மேலும், கோவிலைச் சுற்றி தற்காலிக கடைகள் அமைப்பதை முழுவதுமாக தடுத்து நிறுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar