திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த, கருவேப்பம்பட்டி கொன்னாங்காடு காளிகோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.
இதை முன்னிட்டு கருவேப்பம்பட்டி வேட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் திருவீதி உலா நடந்தது. தலைமை பூசாரி கரகம் எடுத்து ஆடி, வழி நெடுகிலும் படுத்திருந்த ஆண், பெண் பக்தர்கள் மீது நடந்து வந்தார். பின், கோவில் பிரகாரத்தில் காளிநிலை சேர்க்கப்பட்டார். பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.