பதிவு செய்த நாள்
13
பிப்
2016
02:02
ராசிபுரம்: திருப்பதி ரத சப்தமி உற்சவ விழாவுக்க, ராசிபுரத்தில், மாலைகள் தொடுக்கப்பட்டன.
திருப்பதியில் வரும், 14ம் தேதி ரத சப்தமி உற்சவ விழா நடக்கிறது. இதற்காக கொங்கணாபுரம்
திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில்,
ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் மலர்கள் சேகரிக்கப்பட்டு, திருப்பதிக்கு அனுப்பப்பட்டு
வருகின்றன. இதற்காக மலர் மாலைகள் அனுப்ப ராசிபுரம் ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் பக்தர்கள் சார்பில் மலர் தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மல்லி, சாமந்தி, ரோஜா, மேரிகோல்ட், துளசி, அரளி, மருவு, தாமரை, சம்பங்கி உள்ளிட்ட, 2 டன் மலர்கள் பக்தர்களிடம் சேகரிக்கப்பட்டு, அவைகளை பெண் பக்தர்கள் மாலைகளாக தொடுத்தனர். மேலும் கரும்பு, தென்னம்பாளை, தென்னங்குருத்து, பாக்கு குலை, இளநீர், மாங்காய் போன்றவை பக்தர்களிடம் சேகரிக்கப்பட்டன. இந்த மாலைகள் திருப்பதியில் உள்ள தங்க கொடிமரம் மற்றும் உள்பிரகாரங்களில் அலங்கரிக்க எடுத்து செல்லப்படுகிறது.