பதிவு செய்த நாள்
13
பிப்
2016
03:02
பாலக்காடு: பாலக்காடு செம்பை ஏகாதசி சங்கீத உற்சவத்தின் 102-வது ஆண்டு விழா நாளை
துவங்குகிறது.கேரள மாநிலம், பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில், ஏகாதசி இசை விழா பிரசித்தி பெற்றது. செம்பை குடும்பத்தினர் நடத்தும் இவ்விழாவின் கொடியேற்ற உற்சவ விழா நாளை துவங்குகிறது. அண்டலாடி சங்கரன் நம்பூதிரிபாடு தலைமை வகிக்கிறார்.
சங்கீதா, சவுந்திரா சகோதரிகளின் நாதஸ்வர கச்சேரி நடக்கிறது. 15ம் தேதி பத்மபூஷன்
கோபாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், 16ம் தேதி சுகுமாரி நரேந்திர மேனன், அரசு செம்பை
நினைவு சங்கீத கல்லுாரி மாணவர்களின் சங்கீதார்ச்சனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.17ம் தேதி
மேக்னா மூர்த்தியின் கச்சேரி, நிவேதிதா ராமநாதன், லக்ஷனா பரதநாட்டியம் நடக்கிறது. 18ம்
தேதி காலை 8:30க்கு, கோதண்டராம பாகவதரின் தலைமையில் உஞ்சவிருத்தி பஜனை,
மண்ணுார் ராஜகுமார உண்ணி, ஹரிகுமார், சுப்ரமணியன் தலைமை யில், பஞ்சரத்ன கீர்த்தனை பாடுகின்றனர். மாலை 5:30 மணிக்கு புவனா ராமசுப்பு, 6:00க்கு அந்தராமன், பிரகாஷ் உள்ளியேரியின் ஹார்மோனியம், இரவு 8:30க்கு இசைக்கலைஞர் ஜேசுதாஸ், ஜயன் கச்சேரி நடக்கிறது. 19ம் தேதி நடக்கும் சிறப்பு பூஜைகளுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை, செம்பை ஸ்ரீனிவாசன், நிர்வாகிகள் சுரேஷ், பிரகாஷ் உள்ளிட்ட செம்பை குடும்பத்தினரும் கோவில் நிர்வாகத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.