பதிவு செய்த நாள்
15
பிப்
2016
12:02
ஆர்.கே.பேட்டை: அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி மலைக்கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டையில், நெல்லிக்குன்றம் மலைக்கோவில் உள்ளது. அங்கு, ஒவ்வொரு ஆண்டும், ஆடிக் கிருத்திகையின் போது, பக்தர்கள் காவடி எடுத்துச் செல்வர்; மலைச்சுற்று திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. கோவிலிற்கு, படி வழி மற்றும் வாகனங்கள் செல்வதற்கான சாலை அமைக்கும் பணிகள், 10 ஆண்டுகளாக நடந்தன. தற்போது கோவிலின் சீரமைப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து கும்பாபிஷேகம் துவங்கியது.
அதில், நேற்று காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், அதை தொடர்ந்து மகா பூர்ணாஹூதியும் நடந்தன. 8:30 மணிக்கு, கோவில் கோபுரம் மற்றும் மூலவருக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, திருமுருகன் திரு அவதாரம் என்ற தலைப்பில், இசை சொற்பொழிவும், மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாணமும் நடந்தன. அதை தொடர்ந்து, சுவாமி வீதியுலா எழுந்தருளினார்.