மதுரை: மதுரையில் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், பங்காரு அடிகளின் பிறந்த நாளையொட்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.
மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார். அடிகளாரின் சகோதரர் காளிதாஸ் துவக்கி வைத்தார். ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்பட்டன. சுகாதாரத்துறை அதிகாரி அப்துல்கரீம் பெற்றுக் கொண்டார். நிர்வாகிகள் கோகுல்நாத் பிரேம்சந்த், சோமசுந்தரம், அழகர்சாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.