பதிவு செய்த நாள்
15
பிப்
2016
01:02
திருப்பூர்: "திருப்பூர் ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகளை கவனிக்க, தனிக்குழு அமைப்பது என, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், மார்ச், 18ல் நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம், குஜராத்தி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், "கும்பாபிஷேக திருப்பணிகளை விரைந்து முடிப்பது; கோவிலுக்கு பின்புறம் உள்ள நிலத்தை விலைக்கு வாங்கி, கோவிலை சுற்றிலும் நான்கு ரோடு அமைக்க ஏற்பாடு செய்வது; பூ மார்க்கெட் பகுதியில், ரோடு அகலப்படுத்துவது; ஒவ்வொரு பணிக்கும் தனிக்குழு அமைத்து, ஏற்பாடுகளை கவனிப்பது என, முடிவு செய்யப்பட்டது.
துணை மேயர் குணசேகரன், கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் பேசுகையில், "அரசு மற்றும் மாநகராட்சி சார்பில், ஆக்கிரமிப்பு அகற்றுதல், ரோடு அமைத்தல், மழை நீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் துரிதகதியில் மேற்கொள்ளப்படும் என்றனர். "ஆதீஸ்வரா டிரஸ்ட் தலைவர் சுப்ரமணியம், துணை தலைவர் பழனிசாமி, செயலாளர் துரைசாமி, பொருளாளர் ரத்தினசாமி, "சவுமீஸ் எக்ஸ்போர்ட்ஸ் முத்து நடராஜன், "கிளாசிக் போலோ <உரிமையாளர் சிவராம், "கிரீட்டிங்ஸ் ராஜேந்திரன், ஸ்ரீவாரி டிரஸ்ட் ராமு, ராமகிருஷ்ணன், "பாலு எக்ஸ்போர்ட்ஸ் ஜெகதீஷ், "விக்னேஸ்வரா யார்ன் சிவக்குமார், இன்ஜினியர் சண்முகராஜ், "ராகம் எக்ஸ்போர்ட்ஸ் முருகேஷ், "பூமர் பழனிசாமி, "கே.எம்., நிட்வேர் சுப்ரமணியம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கும் திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலயம், இரண்டாம் ஸ்தானீகம் ராஜா பட்டர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.