லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரத சப்தமி சிறப்பு சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2016 01:02
திண்டிவனம்: திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நாச்சியார் பஜனைக்குழு சார்பில், ரத சப்தமியை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
திண்டிவனம் நம்மாழ்வார் சபை தலைவர் வெங்கடேச ராமாமநுஜதாசர் அறிமுக வுரையாற்றினார். ராம் டெக்ஸ்டைல்ஸ் தியாகராஜன், பி.ஆர்.எஸ்., துணிக்கடை பார்த்தசாரதி, நகராட்சி சேர்மன் வெங்கடேசன், சீனு ஸ்ரீதர், லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் விஜயக்குமார் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சென்னை நரசிம்ம பிரியா ஆசிரியர் வாசஸ்பதி அனந்த பத்மநாபாச்சாரியார் பங்கேற்று, "சொன்னவண்ணம் செய்பவன் என்ற தலைமைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாச்சியார் பஜனைக்குழு தலைவர் சீனுவாச பாகவதர், செயலாளர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.