கண்டாச்சிபுரம்: கெடார், முத்தாலம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் அடுத்த கெடார் முத்தாலம்மன் கோவிலில், நேற்றுமுன் தினம் இரவு முத்துப் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. முன்னதாக மாலை 7:00 மணிக்கு பட்டிமன்றம் மற்றும் இசைக்கச்சேரி நிகழ்ச்சிகள் நடந்தது. அதனை தொடர்ந்து மாரியம்மன் கோவில் குளத்தில், தெப்பல் உற் சவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழு வினர் மற்றும் கிராமப் பொது மக்கள் செய்திருந்தனர்.