பதிவு செய்த நாள்
15
பிப்
2016
02:02
சேலம்: சேலம், குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில், நேற்று திருப்படி திருவிழா
கொண்டாடப்பட்டது. முருகன் கோவில்களில், மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில்
திருப்படி திருவிழா கொண்டாடுவது வழக்கம். நேற்று, திருப்படி திருவிழா, குமரகிரி
தண்டாயுதபாணி கோவிலில் கொண்டாடப்பட்டது. இதற்காக, 56 பஜனை குழுக்கள், சேலம்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். இவர்கள், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணியர் சுவாமி கோவில் முன் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக குமரகிரி கோவிலை வந்தடைந்தனர். பின், கோவிலில் உள்ள, 78 படிகளிலும், வெற்றிலை, பாக்கு, பூ, சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடப்பட்டது. இதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. திருப்படி திருவிழாவில் கலந்து கொண்டால், சகல நன்மையும் கிடைக்கும் என்பதால், இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.