பதிவு செய்த நாள்
15
பிப்
2016
02:02
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் நாளை (பிப்.,16) இரவு 8மணிக்குமேல்
கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. பழநி கிழக்குரத வீதியுள்ள மாரியம்மன்கோயில் மாசிதிருவிழா பிப்.,5ல் முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கி பிப்.,25 வரைநடக்கிறது. திருக்கம்பம் சாட்டுதல் பிப்.,10ல் நடந்தது. கம்பத்திற்கு புனிதநீர், பால் ஊற்றியும், அக்னிச்சட்டிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நாளை இரவு 8 மணிக்குமேல் கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் (தீச்சட்டிஎடுத்தல்) அம்மன் தங்கமயில் வாகனத்தில் உலாவருதல் நடக்கிறது. பிப்.,23 இரவு 7.30 மணிக்குமேல் 8.30 மணிக்குள் திருக்கல்யாணமும், பிப்.,24ல் மாலை 4.30மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாநாட்களில் அம்மன் திருவுலா வந்துபக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பிப்.,22 முதல் 24 வரை பக்திசொற்பொழிவு நடக்கிறது. பிப்.,25ல் கொடியிறக்குதலுடன் விழா நிறைபெறுகிறது.