பதிவு செய்த நாள்
15
பிப்
2016
02:02
தர்மபுரி: தர்மபுரி அடுத்த கீழ்நாய்க்கம்பட்டி கொட்டாய் வலம்புரி மஹா கணபதி, நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த, 12ம் தேதி கொடியற்றமும், 13ம் தேதி, காலை, 8 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது.
தொடர்ந்து காப்பு கட்டுதல், தீபாராதனை, யாக பூஜை, முதல்கால பூர்ணாஹீதி நடந்தது. நேற்று காலை, 5 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தனம், திரவிய ஹோமம்,
மஹாபூர்ணாஹீதி நடந்தது. காலை, 6 முதல், 7.30 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.