பதிவு செய்த நாள்
16
பிப்
2016
11:02
ஹெச்.ஏ.எல்: கோடிஹள்ளி, கங்கம்மா தேவி கோவிலில் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
பெங்களூரு பழைய விமான நிலைய சாலை கோடிஹள்ளியில், கங்கம்மா தேவி கோவில் உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவில், கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. சிறிய அளவில் இருந்த கோவில், பெரியதாக கட்டப்பட்டு, கங்கம்மா தேவி புதிய சிலை அமைக்கப்பட்டது.
இதற்கான கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, கணபதி ஹோமம் உட்பட சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள், 108 பால் குட ஊர்வலம் வந்தனர். பக்தர்கள் அனைவருக்கும், கங்கம்மா தேவிக்கு பிடித்த உணவான கேழ்வரகு களி, மொச்சைக்கொட்டை குழம்பு வழங்கப்பட்டது. சி.வி.ராமன் நகர் தொகுதி, பா.ஜ., எம்.எல்.ஏ., ரகு, கவுன்சிலர்கள், வீணாகுமாரி, சசிரேகா, அருணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.