பதிவு செய்த நாள்
16
பிப்
2016
11:02
காரைக்கால்: உலக நன்மை வேண்டி, காரைக்கால் சோமநாதர் கோவிலில் 31ம் ஆண்டு மகா சண்டி ஹோமம் நேற்று நடந்தது.
காரைக்கால் சோமநாயகி சமேத சோமநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி, துர்க்கா வழிபாட்டு மன்றம் சார்பில் 31ம் ஆண்டு சண்டி ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 14ம் தேதி காலை மங்கள விநாயகருக்கு அனுக்ஞை பூஜை, மகாசங்கல்பம், கணபதி ஹோமத்துடன் மகா தீபாராதனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. மாலை நவசக்தி அர்ச்சனை நடந்தது.
நேற்று காலை சண்டி ஹோமம், அஷ்ட பைரவ பூஜை, கோபூஜை, பிரம்மசாரி பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை, சுவாசினி பூஜை நடந்தது. பகல் 12:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு துர்க்காம்பிகைக்கு கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இன்று காலை விநாயகர், துர்க்கா, மகாலட்சுமிக்கு பால்குடம் அபிஷேகம், மாலை சந்தனகாப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜை நடக்கிறது.