பதிவு செய்த நாள்
16
பிப்
2016
11:02
திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, வைர கிரீடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருமலை ஏழுமலையானுக்கு, கோவையை சேர்ந்த பாலமுருகன், அபர்ணா தம்பதியர், சனிக்கிழமை காலை, ஏழுமலையானின் நெய்வேத்திய இடைவேளையின் போது, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, வைர கிரீடத்தை நன்கொடையாக வழங்கினர். இதை, தேவஸ்தான இணை அதிகாரி சின்னங்காரி ரமணா பெற்றுக் கொண்டார். இந்த வைர கிரீடம், சுபமுகூர்த்த நாளில், ஏழுமலையானின் உற்சவமூர்த்திக்கு அணிவிக்கப்பட உள்ளது.