விழுப்புரம்: விழுப்புரம் பெருமாள் கோவிலில், ரதசப்தமி மகோற்சவத்தில் கருட சேவை நடந்தது.
விழுப்புரம் ஜனகவல் லிதாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் நேற்று ரதசப்தமி மகோற்சவம் நடந்தது. காலை 6:00 மணிக்கு பெருமாள் சூரியபிரபை வாகனத்தில் கோவிலை வலம் வந்தார். காலை 9:00 மணிக்கு அனுமந்தவாகனத்திலும், 10:30 மணிக்கு ஷேஷ வாகனத்திலும், மதியம் 12:30 மணிக்கு கருடசேவையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 5:30 மணிக்கு கற்பகவிருட்சம், இரவு 7:00 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் பெருமாள் கோவிலை வலம் வந்தார். அப்போது ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சரவணன், செயல் அலுவலர் முத்துலட்சுமி, பட்டாச்சாரியார் வாசு மற்றும் திருமஞ்சன கைங்கர்யதாரர்கள் செய்திருந்தனர்.