Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் பெருமாள் கோவிலில் ரத ... 500 ஆண்டுகள் பழமையான கோவில் புனரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை 500 ஆண்டுகள் பழமையான கோவில் புனரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் கழிவுகளால் வைகை நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகம்
எழுத்தின் அளவு:
திருப்புவனத்தில் கழிவுகளால் வைகை நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகம்

பதிவு செய்த நாள்

16 பிப்
2016
12:02

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பதோடு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்களும் முகம் சுளிக்கின்றனர்.

மதுரையை கடந்து திருப்புவனம் வழியாக செல்லும் வைகையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆத்மா சாந்தியடையும் என்றும், தங்கள் சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள், காசியை விட வீசம் (பழங்கால அளவு முறை) பெரியது என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை போன்றவிசேஷதினங்களில் அதிகமானோர் வருகை தருகின்றனர். முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்கள் பூஜை பொருட்களான தேங்காய், வாழைப்பழம், விபூதி, குங்குமம், அஸ்தி, பிளாஸ்டிக் பை போன்றவற்றை வைகை ஆற்றிலேயே கரைப்பது வழக்கம், வைகை ஆற்றில் தண்ணீர் ஓடும் போது பொருட்களை அடித்து சென்று விடும்.

ஆனால் தற்போது சிறிதளவே தண்ணீர் செல்வதாலும், ஒரு சில இடங்களில் தண்ணீர் பள்ளத்தில் தேங்கி பாசி படர்ந்து இருப்பதாலும் பூஜை பொருட்களும் தேங்கி விடுகிறது. நாளடைவில் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு நிலவுகிறது. வைகை ஆற்றை சுத்தம் செய்வது பொதுப்பணித்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தான். திதி பொட்டலில் பக்தர்களிடம் கட்டணமான தர்ப்பணத்திற்கு 20 ரூபாயும், திதிக்கு 40 ரூபாயும் தேவஸ்தானத்தால் நியமிக்கப்பட்ட குத்தகைதாரர் வசூலித்து வருகிறார். ஆற்றை சுத்தம் செய்வதில் பொதுப்பணித்துறையும் பேரூராட்சி நிர்வாகமும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,"" வைகை ஆற்றை ஒரு கி.மீ., தூரம் சுத்தம் செய்ய ஒரு லட்ச ரூபாய் செலவாகும். திதி பொட்டல் பகுதியை சுத்தம் செய்ய குறைந்த பட்சம் 5 லட்ச ரூபாய் வரை செலவாகும். மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கினால் சுத்தம் செய்ய முடியும், என்றனர். பேரூராட்சி நிர்வாகத்தரப்பில் கூறுகையில்,"" திதி பொட்டல் வசூல் பணம் முழுவதும் தேவஸ்தானத்திற்கு செல்கிறது. அப்படி இருந்தும் பக்தர்களின் வசதியை முன் னிட்டு குடிநீர் வசதி,கழிப்பிட வசதி செய்து தந்துள்ளோம். ஆற்றை சுத்தம் செய்ய எங்களிடம் போதியநிதி இல்லை, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar