Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனத்தில் கழிவுகளால் வைகை ... பழநியில் கார்த்திகை பெருவிழா பழநியில் கார்த்திகை பெருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
500 ஆண்டுகள் பழமையான கோவில் புனரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
500 ஆண்டுகள் பழமையான கோவில் புனரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

16 பிப்
2016
12:02

ஆயலுார்: திருவள்ளூர் அருகே, 500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை, புனரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் அடுத்துள்ள, ஆயலுார் ஊராட்சியில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான, 500 ஆண்டுகள் பழமையான, சொர்ணாம்பிகை சமேத நீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை, 50 ஆண்டு களாக பராமரிக்காததால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், கோவிலின் உள்ளே இருந்த சொர்ணாம்பிகை சமேத நீலகண்டேஸ்வரர், பாலமுருகன் உள்ளிட்ட எட்டு சுவாமி சிலைகளை, பகுதி வாசிகள் அகற்றி, கோவிலின் முன்புற கதவு அருகே பத்திரப்படுத்தி உள்ளனர். இதனால், 10 ஆண்டுகளாக, இக்கோவிலில் பூஜைகள் நடைபெறுவதில்லை. எனவே, இந்த கோவிலை புதுப்பிக்க, இந்து அறநிலையத் துறையினர் நடவடிக்கை வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அறநிலையத் துறை செயல் அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘ஆயலுார் நீலகண்டேஸ்வரர் கோவிலை, தொல்லியல் துறை மூலம் ஆய்வு  நடத்தி, உபய தாரர்களால் வழங்கப்பட்ட திட்ட மதிப்பீட்டுடன் அரசுக்கு அறிக்கை அனுப்பிஉள்ளோம். அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன் கோவிலை புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்படும்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar