திறப்புக்காக காத்திருக்கும் பக்தர்கள் ஓய்வுக்கூடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2016 12:02
ராமேஸ்வரம்: தமிழக முதல்வருக்காக ராமேஸ்வரத்தில் 2ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள பக்தர்கள் ஓய்வுக்கூடம் ‘பார்’ ஆக மாறியுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, ரயில்வே ஸ்டேஷன் அருகே 10 ஏக்கரில் இருபாலருக்கும் தனித்தனியாக ஓய்வுக்கூடம், கழிப்பறைகள் 2013ல் அமைக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1 கோடி. இவற்றை தமிழக முதல்வர் ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் திறக்க உள்ளதாக, இரண்டு ஆண்டுகளாக திறக்காமல் உள்ளனர். இதனால் வளாகம் முழுவதும் முள்மரங்கள், முள்செடிகள் வளர்ந்துள்ளன. கதவுகள் சேதமடைந்து வருகின்றன. காவலாளிகள் இல்லாததால் மது குடிக்கும் ‘பார்’ ஆக மாறிவிட்டது. சமூக ஆர்வலர் விஜயகுமார் கூறுகையில், ‘‘ஓய்வுக்கூடம் திறக்கப்படாததால் அதிக வாடகை கொடுத்து பக்தர்கள் தங்குகின்றனர். திறக்கப்படாத ஓய்வுக்கூடத்தில் சிலர் மது அருந்துவது வேதனை அளிக்கிறது,’’ என்றார். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பக்தர்கள் ஓய்வுக்கூடம் விரைவில் திறக்கப்படும். பாதுகாப்புக்கு காவலாளிகள் நியமிக்கப்படுவர்’ என்றார்.