பதிவு செய்த நாள்
16
பிப்
2016
01:02
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அய்யனார் கோவிலில், கேரள நம்பூதிரிகள்
சிறப்பு யாகங்கள் நடத்தினர்.
திருவெண்ணெய்நல்லூர், கரைமேல் அழகர் (அய்யனார்) கோவிலில், உலக நன்மை வேண்டியும், கோவிலின் தோஷ பரிகாரத்தை போக்கவும், சிறப்பு யாகங்கள் நடந்தன. காலை 5:00 மணிக்கு, மகா கணபதி யாகத்துடன் பூஜைகள் நடந்தன. கேரளாவிலிருந்து வந்திருந்த பிரவீன்குமார் தலைமையிலான நம்பூதிரிகள் ஆயுள் யாகம், சுதர்சன யாகம், பிரத்தியங்கிரி யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்களை நடத்தினர்.
அதனை தொடர்ந்து நேற்று அகோர யாகம், வேறுபாடு யாகம், திலகவன யாகம், சாய்பூஜ்யம்
யாகம், மற்றும் பூர்ணாஹூதியை செய்து, வீரபத்திரர் சிலை அருகேயுள்ள நம்பூதிரி சுவாமியை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.