பதிவு செய்த நாள்
16
பிப்
2016
01:02
கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில், மாரியம்மன் திருவிழா சிறப்பாக
கொண்டாடப்பட்டது.
அதிகாலை முதல், அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. காலை,
11:00 மணிக்கு, கோவிலில் இருந்து, ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அம்மன், பக்தர்களுக்கு
அருள் பாலித்தார். பக்தர்கள் காணிக்கை செலுத்தி, பூஜை செய்து, அம்மனை வழிப்பட்டனர்.
மாலை, 3:00 மணிக்கு, அம்மன் கோவிலுக்கு அழைத்துச்செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
கோவில் வளாகத்தில், பஜனை, ஆடல், பாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து, நேர்த்திக்கடனாக
முடிக்காணிக்கை செலுத்தப்பட்டது.