பதிவு செய்த நாள்
16
பிப்
2016
01:02
சேலம்: சேலம், நெத்திமேடு தண்ணீர்பந்தல் மஹா மாரியம்மன் கோவில் மாசி திருவிழா, இன்று பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, இன்று இரவு, 9 மணிக்கு அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. வரும், 21ம் தேதி மாலை, 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. 23ம் தேதி காலை, 7 மணிக்கு பவானியில் இருந்து தீர்த்தக்குடம் கொண்டு வருதல், 8 மணிக்கு பால் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி காலை, 8 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7 மணிக்கு பூங்கரகம், அக்னி கரகம், அலகு குத்துதல் நடக்கிறது. தொடர்ந்து அம்மன் புஷ்ப பல்லக்கில் உலா வருதலும், வாண வேடிக்கையும் நடக்கிறது. 25ம் தேதி இரவு, 10 மணிக்கு பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா மற்றும் சத்தாபரணம் நடக்கிறது. 26ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராடல், 27ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.