பதிவு செய்த நாள்
16
பிப்
2016
01:02
மல்லசமுத்திரம்: வையப்பமலை அடுத்த, ராமாபுரம் செல்வமுத்து மாரியம்மன், ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் மார்ச், 6ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு மார்ச், 4ம் தேதி, காலை, 6 மணிக்கு, மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. மறுநாள் ஓம் காளியம்மன் சுவாமி அழைத்து வருதல், முளைப்பாலிகை எடுத்து வருதல், வேதிகார்ச்சனை, 108 மூலிகை பொருள்களால் ஹோமம் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு, கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச், 6ம் தேதி, நான்காம் கால யாகபூஜையும், காலை, 7 மணிக்கு விமானத்துக்கும், தொடர்ந்து, வினை தீர்க்கும் விநாயகர், செல்வமுத்து மாரியம்மன், ஓங்காளியம்மனுக்கும் கும்பாபிஷேக விழா நடக்கிறது.