பழநி மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்: பிப். 24ல் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2016 09:02
பழநி: பழநி மாரியம்மன்கோயில் மாசித்திருவிழாவில் கொடியேற்றமும், கம்பத்திற்கு பூவோடு வைக்கும் விழா நடந்தது. மாரியம்மன்கோயில் மாசித்திருவிழா பிப்.,5ல் துவங்கி பிப்.,25 வரை 21 நாட்கள் நடக்கிறது. இதில், திருக்கம்பம் அலங்கரிக்கப் பட்டு அதற்கு புனித நீர், பால் ஊற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். நேற்று கொடியேற்றத்தை முன்னிட்டு பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணியம் குழுவினர் மாரியம்மன் சன்னதியிலுள்ள கொடிமரத்திற்கு சிறப்புபூஜைகள் செய்து இரவு 8.35 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருக்கம்பத்தில் பூவோடுவைத்து (தீச்சட்டிகள்) பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் காஞ்சிக்காமாட்சியம்மன் அலங்காரம் செய்திருந்தனர். இரவு 9 மணிக்குமேல் தங்கமயில் வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அடிவாரம் அழகுநாச்சியம்மனுக்கு காலை 9மணிக்கு மேல் திருக்கல்யாணமும், அதைதொடர்ந்து அம்பாள் புதுச்சேரி சப்பரத்தில் உலா வருதல் நடக்கிறது. பிப்.,23ல் திருக்கல்யாணம், பிப்., 24ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.