பதிவு செய்த நாள்
18
பிப்
2016
11:02
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி ஜடாமகுட தீர்த்த கோயில் மகாமகம் விழாவையொட்டி பக்தர்களுக்கு புனித நீர் தெளிப்பதற்காக 50 கருவி பொருத்தப்படும் என, கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார். தனுஷ்கோடி ஜடாமகுட தீர்த்த கோயிலில் பிப்.,22ல் மகாமக தீர்த்தா வாரி நடக்கிறது. இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களு க்கான வசதிகள், பாதுகாப்பு குறித்து நேற்று கலெக்டர் நடராஜன், தென் மண்டல ஐ.ஜி., முருகன் ஆய்வு செய்தனர். பின், கோயில் அலுவல கத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர், எஸ்.பி. மணிவண்ணன், டி.எஸ்.பி. முத்துராமலிங்கம், கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன் பங்கேற்றனர். இதுகுறித்து கோயில் இணை ஆணையர் கூறியதாவது: பிப்.,22 மதியம் 12.05க்கு மேல் தீர்த்தாவாரி நடக்கிறது. நெரிசலை தவிர்பதற்காக கோயிலை சுற்றி 50 இடங்களில் புனித நீர் தெளிப் பான் கருவியும், 10 இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பக்தர்கள் அமர வசதியாக தற்காலிக பந்தல் அமைக்கபட்டுள்ளது. அன்று காலை 7 மணிக்கு சுவாமி, அம்மன் புறப்பாடாகியதும், திருக்கோயில் நடை சாத்தப்படும். பின், மாலை 5 மணிக்கு தீர்த்த குளத்தில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடகி இரவு 7 மணிக்கு கோயிலுக்கு வந்ததும் நடை திறக்கப்படும், என்றார்.