பதிவு செய்த நாள்
18
பிப்
2016
11:02
ராசிபுரம்: ராசிபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. ராசிபுரம், கச்சேரி தெரு வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கணபதி, முருகன், மூன்று நிலை ராஜகோபுரம் மற்றும் நவக்கிரக மூர்த்திகள் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நாளை (19ம் தேதி) காலை, 6 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை, 7 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. இன்று, காலை, 8 மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்து, இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை, (19ம் தேதி) அதிகாலை நான்காம் யாக பூஜை துவங்கி, அதிமஹா பூர்ணாஹூதி நடக்கிறது. தொடர்ந்து, காலை, 6 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.