திருச்சுழி: திருச்சுழி மாரியம்மன் கோயில் மாசி பொங்கல் விழா நடந்தது. கடந்த 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவை தொடர்ந்து, ஏழு நாட்கள் நடந்த விழாவில், தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் மாலையில் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. ஏழாம் நாள் விழாவாக பொங்கல் விழா மற்றும் அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். ஊராட்சி தலைவர் பாஸ்கரன் தலைமையில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.