கும்மிடிப்பூண்டி: சாமிரெட்டிகண்டிகை செல்வ விநாயகர் கோவிலில், அன்னாபிஷேக விழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை, பெரியார் நகரில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. மாசி மகாமகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, அந்த கோவிலில், செல்வ விநாயகருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னம், காய்கறிகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.