திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் சுத்தமான குடிநீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2016 11:02
கீழக்கரை,: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழாவிற்கு ஊராட்சி தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். பேஷ்கார் கண்ணன் முன்னிலை வகித்தார். பக்தர்கள் பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் துரைச்சாமி நன்றி கூறினார்.