திருத்தணி : திருத்தணி, சுப்ரமணிய நகரில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில், நேற்று முன்தினம், மாசி மகம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 108 குத்து விளக்கு பூஜை நடந்தது.இரவு, 7:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, 108 பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பூஜை நடத்தினர். பின் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு, 10:00 மணிக்கு முதல், நள்ளிரவு, 12:00 மணி வரை, அம்மன் பக்தி பாடல்கள் மற்றும் பஜனை நடந்தன.